பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே ,அதற்கான சூழ்நிலையை உருவாக்கி வழிநடத்திச் செல்லும் என்பது இப்பாடல். பாடலாசிரியர் சு. .சிவகுமார் . cell : 7550053222 . தன்னால் நடக்குது தவணையில் கிடைக்குது ஊரும் உலகமும் என்னால் என்றழைக்குது தன்னால் நடக்குது தவணையில் கிடைக்குது ஊரும் உலகமும் என்னால் என்றழைக்குது இலை மறை காயாய் சொல்வதுண்டு இதன் பொருள் இது என கொள்வதுண்டு புரிந்து கொண்டதற்கு பாராட்டும் உண்டு தவறினால் குறிப்பால் திருத்துவதுண்டு அழுத்தம் திருத்தமாய் உரைப்பதுண்டு அசட்டுத்தனமாய் நான் சிரிப்பதுண்டு தொடர்புக்கு அப்பாலும் தொடர்பு உண்டு தன்னால் நடக்குது தவணையில் கிடைக்குது ஊரும் உலகமும் என்னால் என்றழைக்குது தந்ததை உடனே தர வலியுறுத்துவதுண்டு கொடுத்த கையோடு கைக்குலுக்குவதுண்டு பேதங்கள் எல்லாம் பேதமை என்னும் இரகசியம் ஆழ் மனதிடம் உண்டு உருவம் அல்லாத உறவு முறை என்று உறவுகள் காணாத நெருக்கமும் உண்டு ஓய்வறியாத இயக்கத்தில் நானும் ஒன்று தன்னால் நடக்குது தவணையில் கிடைக்குது ஊரும் உலகமும் என்னால் என்றழைக்குது தன்னால் நடக்குது தவணையில் கிடைக்குது ஊரும் உலகமும் என்னால் என்றழைக்குது











